களியக்காவிளை, பிப்- 22
படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அதங்கோடு பகுதியில் உள்ளது. அந்த நிலத்தில் வாழை, பப்பாளி மரங்களை பயிரிட்டுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் தாமரேசன்(59), அவரது மனைவி சரோஜா (50). இவர்கள் சுரேஷ்குமாருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழை, பப்பாளி பயிர்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து சுரேஷ்குமார் குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தாமரேசன் மற்றும் சரோஜா மீது வழக்கு பதிவு செய்ய களியக்காவிளை போலீசாருக்கு உத்தரவிட்டது. களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.