திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரியில் பயின்று வரும் மாணவியரின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தவும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சனைகள் குறித்து எளிதாக உதவிகோரும் வகையில் 75 கல்லூரிகள் தேர்வு செய்யயப்பட்டு, ஒவ்வொரு கல்லூரிக்கும் போலிஸ் அக்கா” என்ற பெயரில் திட்டம் இன்று PSNA பொறியியல் கல்லூரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அறிமுக விழாவில், தேர்வு செய்யப்பட்ட 75 கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் சமூக நலத்துறையினர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு முன் மாதிரி திட்டமாக “போலீஸ் அக்கா என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A.பிரதீப் அவர்களின் சீரிய முயற்சியால் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் M. மகேஷ் மற்றும் P தெய்வம் ஆகியோர்களின் மேற்பார்வையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 75 கல்லூரிகளுக்கு 51 காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைத்து கல்லூரிகளுக்கும் போலீஸ் அக்கா பெயரில் ஒரு மகளிர் காவலர் தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இத்தொடர்பு அலுவலர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுடன் கலந்துரையாடுவதுடன் அவ்வப்போது கல்லூரி பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு மாணவியர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான / பாலியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும். மாணவியர்களுக்கான அனைத்து பிரச்சினைகளையும் சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து தீர்வு காண நடவடிக்கை எடுத்து கல்லூரி மாணவியருக்கு நல்ல சகோதரியாக போலீஸ் அக்காவாக செயல்படுவார்கள். மாணவியர்கள் பகிரும் தகவல்கள் மற்றும் கருத்துக்களை இரகசியமாக பாதுகாத்திடவும் தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
போலீஸ் அக்கா திட்டத்தை பற்றி மாணவியர் தெரிந்து கொள்ளவும், அந்தந்த கல்லூரிகளுக்கு
நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்காவின் பெயர். மொபைல் எண் குறித்து தெரிந்து கொள்ளும்
வகையிலும், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் கியூ.ஆர் கோடு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது. இந்த கியூ.ஆர்.கோடு அடங்கிய போஸ்டர்கள் அனைத்து கல்லூரிகளின் முன்பு
ஒட்டப்பட உள்ளது. மாணவியர் தங்களின் மொபைல் போனில் இருந்து, இந்த கியூ.ஆர் கோட்டினை
ஸ்கேன் செய்தால், தங்கள் கல்லூரிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீஸ் அக்கா யார். எந்த
காவல்நிலையத்தில் பணிபுரிகின்றார் மற்றும் அவரின் மொபைல் எண் உள் ளிட்ட விபரங்களை
தெரிந்து, அவருக்கு அலைப்பேசி மூலம் தொடர்புக்கொண்டோ. அல்லது நேரில் சந்தித்தோ அவரிடம்
புகார் அளிக்கலாம். இவ்வாறு மாணவியர்கள் பகிரும் தகவல்கள் மற்றும் புகார்கள் இரகசியமாக
பாதுகாக்கப்படும் என்று தெரியப்படுத்தப்படுகிறது.