சங்கரன்கோவில்.ஜூலை.12.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து சுதந்திரப் போராட்ட வீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அழகு முத்து கோனின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி, நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மாணவர் அணி உதயகுமார் ,தொண்டரணி அப்பாஸ் அலி ,மாவட்ட பிரதிநிதி செய்யது அலி ,நகரத் துணை செயலாளர் சுப்புத்தாய், நகராட்சி கவுன்சிலர்கள் விஜயகுமார், செல்வராஜ் , வக்கீல்கள் கண்ணன் அன்பு செல்வன் மற்றும் பாட்டத்தூர் ராமலிங்கம், தாஸ் ,ஜான், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.