By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பை வெளியிடாத மாவட்ட நிர்வாகத்திற்கு தளவாய்சுந்தரம் கண்டனம்

Last updated: November 3, 2025 5:54 pm
November 3, 2025
23 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 3 –

குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளை பெருமைபடுத்தும் வகையில் அரசு உத்தரவுக்கு இணங்க நவம்பர் 1-ம் தேதி அரசு விடுமுறை நாள் என ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து வந்தது. இந்நிலையில் குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதியை விடுமுறை நாள் என அரசு அறிவிக்கவில்லை. சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்தாலும் இந்த நாளின் முக்கியத்துவத்தை கூறி விடுமுறை விடப்பட்டதை பொதுமக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்குரிய விடுமுறை அறிவிப்பை ஏன் வெளியிடவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயலுக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைப்பதற்கு மார்ஷல் நேசமணி அவர்களுடைய தலைமையில் 1947-ம் ஆண்டு முதல் 1956 வரை தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதன் பயனாக 1956 நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்தது. இதற்கான போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வெற்றி பெற்றமைக்காக மார்ஷல் நேசமணி அவர்களை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குமரித் தந்தை என்று அழைத்து பெருமை சேர்த்து வருகிறார்கள்.

இதனடிப்படையில் நேற்றைய தினம் (01-11-2025) குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்து 70-வது பிறந்தநாளை கொண்டாடி தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்தது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். இந்நன்னாளை முன்னிட்டு ஆண்டு தோறும் குமரி மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அறிவித்து இந்நாளுக்கு பெருமை சேர்த்து குமரி மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி வந்தது.

இந்நிலையில் (01-11-2025) குமரி மாவட்டம் தாய்த் தமிழகத்தோடு இணைந்து 70-வது பிறந்த தினத்தை கொண்டாடியது. இந்நாள் மகிழ்ச்சிக்குரிய பொன்னாளாகும். இந்நாளுக்குரிய சிறப்பு அந்தஸ்தான விடுமுறை நாள் அறிவிப்பை அரசும், மாவட்ட நிர்வாகமும் வெளியிடவில்லை. சனிக்கிழமை அரசு விடுமுறையாக இருந்தாலும் கூட இந்நாளுக்குரிய பெருமையை எடுத்து சொல்லும் விதமாக இதற்குரிய விடுமுறை காரணத்தை மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். முறையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை.

விடுமுறையானலும் முறையான அறிவிப்பு வெளியிட்டு இருந்தால் இந்நாளின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்திருப்பார்கள். இந்த நாளின் முக்கியத்துவத்தை மாவட்ட நிர்வாகம் மறந்தது ஏன்? மறைத்தது ஏன்? முறையான அறிவிப்பு செய்யாதது ஏன்? இந்த முக்கியமான நாளுக்கு விடுத்த விடுமுறை அறிவிப்பை மக்களுக்கு தெரிவிக்க மறுத்தது ஏன்? மேலும் அன்றைய நாளில் பல்வேறு நூலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கியதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். முறையான அறிவிப்பு இருந்திருந்தால் இந்நாளின் முக்கியத்துவம் மக்களுக்கு தெரிந்திருக்கும். முறையான விடுமுறை முக்கியத்துவ அறிவிப்பை செய்யாத இந்த செயலுக்கு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

டிட்வா புயல் எதிரொலி; பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்
நேரு யுவ கேந்திரா மற்றும் ஹார்ட் பீட் மன்றம்
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா

June 26, 2024
152 Views
மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் சம்பவம்: இஸ்ரேல் காசா நகரப் பள்ளியை குண்டு வீசி தாக்கியதில் குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல் ஆர் ஜி மகளிர் அரசு
வெள்ளிச்சந்தையில் பெண்ணை கீழே தள்ளி மிரட்டல் விடுத்தவர் கைது
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account