மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் த. முருகேசன் தலைமை வகித்தார்.
மாவட்ட கழக செயலாளர் கொளஞ்சி,
மாநில இளைஞர் அணி செயலாளர் ஆசைத்தம்பி, வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க மாநில துணை பொது செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் 100 க்கு மேற்பட்ட ம.தி.மு.க வினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் ஓன்றிய செயலாளர்கள் வாசு, மணிகண்டன், கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் தங்கப்பன், முஜிபூர் இரகுமான், மார்கெட் ஆதிகேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞர் அணி சார்பில் நிகாஸ் நன்றியுரையாற்றினார்.