தஞ்சாவூர் எம் பி .
தஞ்சாவூர்.மார்ச்.17.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம் பலத்தை அடுத்துள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி சமூக வலைதளத்தில் பதிவிட்டார் மாணவி அதை பார்த்து அந்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று உதவி வழங்கினார் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர். ச.முரசொலி .
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம் பலத்தை அடுத்துள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர். ரெங்கசாமி. இவரது மனைவி ராக்கம்மாள் இவர்களுக்கு நித்தியஸ்ரீ (வயது 14 )ஹரிகரசுதன் (வயது 12 )என்ற இரண்டு குழந்தைகள் .இவர்கள் நித்தியஸ்ரீ சித்துக்காட்டில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பும். ஹரிகரசுதன் 7ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த 9 | ஆண்டுகளுக்கு முன்பு ராக்கம்மாள் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார். மனைவி இறந்த பின்னர் ரங்கசாமி தனது குழந்தைகள் நன்றாக வளர்த்து ஆளாக்குவது ஏன் உக்கமாக கொண்டாள்.
இந்த நிலையில் கடந்து சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் ரெங்கசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அவருக்கு யானைக்கால் நோய் பாதித்த நிலையில் எந்த வேலைக் கும் செல்ல முடியாமல் இருந்து குழந்தைகளையும் வைத்துக் கொண்டு மிகுந்த அவதிப்பட்டு வருகிறார் .100 நாள் வேலைக்கு மட்டும் ரெங்கசாமி சென்று வருகிறார். இதன் மூலம் கிடைக் கும் சொற்ப வருமானத்தை மட்டுமே நம்பி இந்த குடும்பம் நடந்து வருகிறது .இந்த நிலையில் 100 நாள் வேலை மூலம் கிடைக்கும் சம்பளமும் தற்போது வழங்கப் படாததால் மிகுந்த கஷ்டமான நிலையில் இருந்த இந்த குடும்பம் உள்ளது.
தாயார் இறந்த நிலையில் தந்தையோ, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறந்த ஏழ்மை நிலையில் தனது குடும்பம் பயணித்தாலும் நன்றாக படித்து தனது குடும்பத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதையே தனது லட்சியமாக கொண்டுள்ளார் மாணவி நித்யஸ்ரீ.
தனது தந்தை ரெங்கசாமி இரவில் சமைத்து தரும் உணவை சாப்பிட்டு, தங்களது சிறு குடிசை யில் மண்எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தானும் தனது தம்பியும் படிப்பதாகவும் மறுநாள் மதியம் தாங்கள் படிக்கும் பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை தானும் தனது தம்பியும் சாப்பிடுவோம் எனவும் தங்களது குடும்பத்தின் ஏழ்மை நிலை குறித்து சமூக வலைதளத்தில் அந்த மாணவி பதிவு செய்திருந் தார் .மேலும் கருணை உள்ளம் கொண்டவர்கள் தங்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும் என்று மாணவி அந்த பதிவில் வேண்டு கோள் விடுத்து இருந்தார்.
இந்த செய்தியை பார்த்ததும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி . மாணவிக்கு உதவிட முன் வந்தார் மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவியிடம் குடும்ப விவரங்களை கேட்டறி ந்தார். அப்போது மாணவி தனது குடும்பத்தில் ஏழ்மை நிலை குறித்து கண்ணீரும், கம்பலை யுமாக எம்பி இடம் தெரிவித்தார்.
இதைக் கேட்ட முரசொலி எம்பி மாணவியின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கியதுடன், நிதி உதவி வழங்கினார். விரைவில் மாணவி வீட்டுக்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக ஒரு உறுதி அளித்தார்.
சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து விட்டுக்கே நேரில் சென்று தனக்கு உதவி செய்த தஞ்சாவூர் எம்.பி. முரசொலி நித்தியஸ்ரீ மற்றும் கிராம மக்கள் நன்றியும் ,பாராட்டுதலையும் தெரிவித்தனர்