தஞ்சாவூர். மே.18.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்ததற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றி உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மகப்பேறு சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நாள் தோறும் சுமார் 40 குழந்தைகளும், மாதந்தோறும் சராசரியாக 1200 குழந்தைகளும் பிறக்கிறது. இதில், மகப்பேறின் போது மாதத்துக்கு ஏறத்தாழ 30 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்து வந்தன. மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில் உள்கட்டமைப்பை ஏற்படுத்துதல், நவீன உபகரணங்கள் அளித்தல், தாய்மார்களுக்கு சத்தான மருந்து மாத்திரைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதன் மூலம் கடந்த 10 மாதங் களாக மகப்பேறும்போது குழந்தை கள் இறப்பு வெகுவாக குறைக்கப் பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்களை பாராட்டி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நற்சான்றிதழ் கள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ,மகப்பேறு மருத்துவ துறை தலைவர் பாக்கியவதி, குழந்தைகள் நலத்துறை தலைவர் செல்வகுமார் ,மருத்துவர் அரவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறின் போது குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைத்த



