தஞ்சாவூர். மே.3.
தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்தை ஒட்டி தேரில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
இக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்கள் தொடரும் விழாவில் நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது
இவ்விழாவில் 15 ஆம் திருநாளான மே 7ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை விநாயகர், சுப்ரமணியர், நிலோத்பலாம்பாள் சண்டிகேஸ்வரர், தியாகராஜர் – கமலாம்பாள் ஆகியோர் வரிசையாக புறப்பட்டு தனித்தனி தேரில் எழுந்தருளி மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
இதையொட்டி மேல வீதியில் உள்ள தேர் கட்டுமான மேற்கொள் வதற்காக பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இதில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் சத்தியராஜ், கண்காணிப்பாளர் ரவி ஆய்வாளர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தேரை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதாரணமாக 19 அடி உயரம் உள்ள தேர் அலங்கரித்த பிறகு 50 அடியை எட்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.



