சங்கரன்கோவில், நவ. 26 –
சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றது முதல் 1500 நாட்களைக் கடந்து தினமும் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி என்பது கடந்த 32 ஆண்டுகளாக அதிமுக வசம் இருந்த தொகுதியாகும். கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பில் ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து வெற்றி பெற்ற நாளில் இருந்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து தினமும் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கி வருகிறார். மதிய உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் அதற்கென சமையல் செய்ய பணியாளர்களை நியமித்து உணவு தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.
சரியாக மதியம் 12 மணிக்கு பொதுமக்களுக்கு உணவு வழங்கும் வகையில் அதற்கென ஆட்களை நியமித்து உணவு சரியான நேரத்தில் வழங்க பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் ஆன நாள் முதல் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ உணவு வழங்கி வருவது 1500 நாட்களை கடந்து வழங்கப்படுகிறது. மக்களின் பசியை தீர்க்கும் வகையில் ராஜா எம்எல்ஏ உணவு வழங்கி வருவதற்கு பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.



