தென்காசி, டிச. 4 –
அமர் சேவா சங்கத்தின் சார்பாக உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களில் சார்ந்த வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் உள்ள மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் புளியங்குடி இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியில் வைத்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டார்கள். இந்த விளையாட்டுப் போட்டியினை தென்காசி மாவட்டம் பாஜக தலைவர் திரு. ஆனந்தன் அய்யா சாமி அவர்களும், திரு சீனிவாசன் சவுக்கே எஸ்டேட் அக்ஷய பாத்திரம் தலைமை ஆலோசகர் அவர்களும், திரு அருண்குமார் மலையன்குளம் சோதிடர் அவர்களும் தலைமை வகித்து விழாவினை துவக்கி வைத்தார்கள்.
இதில் அமர்சேவா சங்க செயலாளர் திரு. சங்கரராமன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் இதில் கிராமம் சார்ந்த மறுவாழ்வு திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. இசக்கிமுத்து அவர்களும், 8 ஒன்றியங்களில் உள்ள சமூக பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து மகிழ்ந்தார்கள்.



