சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை ஆரூர்.வட்டகை எனும் இந்த ஊர் சிவகங்கை சமஸ்தானத்தின் முதல் மன்னரான சசிவர்ணத்தேவரின் சொந்த ஊராகும் இந்த ஊரில் உள்ள ஸ்ரீ எக்காளதேவி அம்மன் கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
நாலுகோட்டை பஞ்சாயத்துத் தலைவர் ஆர். எம். மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு வழிபாடு செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் யாக பூஜை வேதபாராயணம் கோ பூஜை நாடிசந்தானம் ஸ்பகர்சாகுதி நான்காம் கால பூஜை ஆகியனவும் சிறப்பாக நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ எக்காளதேவி அம்மனுக்கு கும்பாபிஷேகமானது புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிவஸ்ரீ கணேசகுருக்கள் மற்றும் பூசாரிகள் வழிபாட்டு நிகழ்வுகளை சிறப்பாக செய்தனர். இதனால் இவர்களுக்கு கிராமத்தின் சார்பில் மரியாதைகள் செய்யப்பட்டது. விழா நிறைவில் சி.ஆர். சுந்தர்ராஜன் மேற்பார்வையில் வருகை புரிந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.