நாகர்கோவில் – செப்- 07,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு ஏழகரத்தில் உள்ள பிரசித்து பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன் பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி திருக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் ஆவணி பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆவணி மாதம் என்றாலே கோவில்களில் விழா காலமாகும் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறில் உள்ள ஏழகரத்தில் உள்ள பிரசித்து பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொன் பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோவிலில் 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஆவணி பெருந்திருவிழா இன்று கொடியேற்றதுடன தொடங்கியது முன்னதாக கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து கோவில் பூசாரிகள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திரு கொடியேற்றம் நடைபெற்றது .. 10 நாட்கள் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அலங்கார தீபாராதனைகள், சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல், சுவாமி வேட்டைக்கு எழுந்தருளல். மாறுவேட போட்டிகள். நாட்டிய நிகழ்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன .
9 ஆம் நாள் திருவிழாவான வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை தேரோட்டம் நிகழ்ச்சியும், 10 ஆம் நாள் திருவிழாவான வரும் 15 ஆம் தேதி அன்னதானம் அதனை தொடர்ந்து இரவு ஆராட்டு நிகழ்சியோடு ஆவணி பெருந்திருவிழா நிறைவு பெறும். விழா ஏற்ப்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.