காளையார்கோவில்:
ஜன:13
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மு. மணிமேகலை தலைமை வகிக்க மாவட்ட செயலாளர் சகாய தைனேஸ் வரவேற்புரையாற்றினார்.சங்க பொதுச்செயலாளர் ச. மயில் சங்கத்தின் வேலை அறிக்கைகளை சமர்ப்பித்து சங்எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் மயில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஜீவாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் மேலும் இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். நூற்றுக்கணக்கான ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



