தஞ்சாவூர் ஜூலை 23
காவிரி பிரச்சனை, பட்ஜெட் போன்றவற்றால் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது என்றார். திராவிட கழகத் தலைவர் கி வீரமணி.
காவிரி நீர் உரிமை கோரி தஞ்சாவூர் பனங்கள் கட்டிடம் முன் திராவிட கழகம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் :
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்கிற பெயர் ,தமிழ் மக்களின் உரிமை ,வெள்ள நிவாரணம் என எதுவும் இடம்பெறவில்லை .மாறாக குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
எனவே வஞ்சிக்கப்படுகிற தமிழ்நாட்டுக்கு வாழ்வளிக்கும் விதமாக நமது உரிமைப் போர் முழக்கம் வர வேண்டிய நேரத்தில் வரும் .இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் சேர்ந்து முடிவெடுப் போம். தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் விரைவில் தொடங்கும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடக் கழக மாவட்ட தலைவர் அமர்சிங் வரவேற்றார் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார் குணசேகரன் காப்பாளர் அய்யனார் மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழகத் தலைவர் வீரமணி தலைமை தாங்கி பேசினார்.திமுக எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) அன்பழகன் (கும்பகோணம்) அசோக்குமார் (பேராவூரணி ) தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன் ,மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி ஜி ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்ட செயலர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் தெற்கு மாவட்ட செயலர் முத்து உத்திராபதி விசிக மத்திய மாவட்ட செயலர் ஜெய்சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர் ஜெயினுலாபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை செயலர் பாதுஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட செயலர் அருணகிரி நன்றி கூறினார்.