திருப்பத்தூர்:மார்ச்:13,திருப்பத்தூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் திமுக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டமானது மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. துணை அமைப்பாளர் பிரேம்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட துணை செயலாளர் T K மோகன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட கவுன்சிலர் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன், கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தலைமை கழக பேச்சாளராக கரூர் பிரபு கலந்து கொண்டு திமுக ஆட்சியின் நலத்திட்டங்களை விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நகர துணை செயலாளர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் கணேஷ் பாபு,மணிமாறன், வேல்முருகன், தமிழரசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், துணை அமைப்பாளர் TC கார்த்தி, 34 வது வார்டு பிரதிநிதி தீபா தியாகு, நிகழ்ச்சியினை நகர அவைத் தலைவர் ஸ்ரீதரன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வசந்த் ராஜ் நன்றியுரை வழங்கினார். மேலும் இக்கோட்டத்தில் மாவட்ட ,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அணிகள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.