தருமபுரி நகர திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உட்பட்ட
9-ஆவது வார்டு சார்பில் தமிழக முதலமைச்சரின் 72-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் 9-ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இவ்விழாவையோட்டி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் கனகராஜ், ராஜா, ஜெகன், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.