கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வைத்து அகஸ்தீஸ்வரம் தாலுகா, ராஜாக்கமங்கலம் பிர்கா சர்வேயர் முகமது அஜ்மல் கான் நீண்டகரை பி கிராம உதவியாளர் ராஜா என்பவர் உடன் 2000 ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா ராஜாக்க மங்கலம் மேல தெரு பகுதியை சேர்ந்த அணஞ்ச பெருமாள் மகன் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்ரீ பத்மநாபன் வயது 71. இவருக்கு சொந்தமான நீண்டகரை பி வில்லேஜ் புல எண் 497/13 ல் உள்ள 11 சென்று சொத்தை அளப்பதற்காக அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அதன் பின்னர் கடந்த 06-05-2025 அன்று தனது சொத்தை எப்போது அளவீடு செய்ய வருவீர்கள் என்று கேட்க சென்ற போது நீண்டகரை பி வில்லேஜ் கிராம உதவியாளர் ராஜா என்பவர் நிலத்தை அளந்து “எப்” லைன் சான்று தர ரூபாய் 2000 லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஓய்வு பெற்ற ஆசிரியர் ஸ்ரீ பத்மநாபன் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்து உள்ளார். அதன்படி நேற்று 09-05-2025 லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி சால்வன் துரை ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய 2000 ரூபாயை கிராம உதவியாளர் மற்றும் பிர்கா சர்வேயர் முகம்மது அஜ்மல் கான் ஆகியோரிடம் மாலை 3:45 மணி அளவில் கொடுக்கும் போது லஞ்சப் பணத்தை உதவியாளர் ராஜா வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த குமரி லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சால்வன் துரை தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.