தருமபுரியில் இந்திய அரசு நேரு யுவகேந்திரா மூலம் பதிவு செய்யப்பட்ட மன்ற பெயர் பலகை திறப்பு விழா கக்கன் இளைஞர் மன்றம் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பரமசிவம் ரயில்வே ஒப்பந்ததாரர் பெயர் பலகை திறந்து வைத்தும், மரக்கன்றுகள் நடுவிழாவையும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நாகராஜ், தேவன் வார்டு உறுப்பினர் ஆறுமுகம், பாவல்ராஜ், பரமசிவம், விஜயன், மணி, கமலக்கண்ணன்,நவீன், நாகராஜ், கபில்தேவ் மற்றும்கக்கன் மன்ற நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாட்டை செய்திருந்தனர். இவ்விழாவில் மன்ற நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.



