மீனவர்கள் கேள்வி தொடர்பாக பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத்தின் தலைவரும் கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-
அரசியல் வாழ்வில் மிகவும் முதிர்ச்சி பெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மீனவர்களை பற்றி பேசிய பேச்சு அவரின் அறியாமையை காட்டுவதால் சிறுபிள்ளை தனமான விவாதமாக தான் எடுத்துக்கொள்ள முடிகிறது.
ஏன் என்றால் கடல் நாட்டுக்கு சொந்தம் என்று அறைகூவல் விடுக்கும் பொன் ராதாகிருஷ்ணன் ,நாடு முதலில் மக்களுக்கு சொந்தம் என்பதை உணர மறந்து விடக்கூடாது.
ஒரு திட்டமானது மீனவர்களின் வாழ்வாதாராமோ,அவர்களின் உடல் ரீதியான ஆபத்துக்களோ அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது என்றால் அதை தெளிவு படுத்த வேண்டியது அதை முன்னேடுக்கும் நாட்டை ஆளும் அரசாங்கத்தின் கடமையாகும்.
அதை விட்டு விட்டு மிரட்டும் தொனியில் குழப்பும் படியான கேள்வியையும்,குழம்பிய படி பதிலையும் நீங்களே சொல்லி,மக்களின் கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவி விட்டதை அறியாமையா? கயமையா? என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியமோ,அதே போலானது ஒரு அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து நடப்பதுமே ஆகும்.ஆகவே மீனவர்கள் தொடர்பாக உங்களின் பேச்சை இந்த நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறேன்.
எனவே இனி வரும் நாட்களில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பொதுவெளியில் உங்கள் பேச்சு இருக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.