கோவை மே:3
கிரியேட்டிவ் களம் மற்றும் முதலுதவி சமூக நல அறக்கட்டளை இணைந்து பொள்ளாச்சி கோவை சாலையில் அமைந்துள்ள கந்த மஹாலில் கோடை திருவிழா 2025 கண்காட்சி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி,
பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், ஸ்ரீ குமரன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நிறுவனர் முத்துக்குமார் மகாலிங்கம், கிருஷிகா நிறுவனத்தின் தலைவர் கிருத்திகா ரவிசங்கர், தொழிலதிபர் நித்தியானந்தம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து மே உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியில் தன்னலம் பாராமல் உழைத்து வரும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோடை திருவிழாவில் நடிகர் அஜித் அவர்களின் பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் குழந்தைகள் பேஷன் ஷோ, டான்ஸ் ஷோ போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஆட்சி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், ஊராட்சி மன்ற யூனியன் கவுன்சிலர் பாலகுமார், துணைத் தலைவர் கல்யாணி காளி ராஜ், ஆச்சி பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சேரன் நகர் சுரேஷ், மோகனப்பிரியா கணேசன், தில்லைநகர் சுரேஷ் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி பைக் ரேஸ் கிளப் நிறுவனர் செல்வ மணிகண்டன், ஆழம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் செந்தில்குமார், முதலுதவி சமூகநல அறக்கட்டளை நிர்வாகிகள், கிரியேட்டிவ் களம் நிறுவன நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.