தஞ்சாவூர் டிச 23.
தஞ்சாவூரை அடுத்துள்ள குருங்குளம்அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை உள்ளது.இங்கு டிசம்பர் மாதத்தில் தான் அரவை பருவம் தொடங்கும்.
அதன்படி குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடங்கியது சர்க்கரை ஆலையில் பூஜைகள் செய்யப்பட்டு கரும்பு அரவையை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறும் போது :
குருங்குளம் சர்க்கரை ஆலை தற்போது விவசாயிகள் கேட்டுக் கொண்டபடி முன்கூட்டியே கரும்பு அரவை தொடங்கியுள்ளது. 4800 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு, இந்த ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட உள்ளது அடுத்த ஆண்டு முதல் 2 லட்சம் டன் கரும்பு அறுவை செய்யும் வகை யில் கரும்பு பயிரி டும் பரப்பளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ரவிச்சந்திரன் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா மற்றும் கரும்பு விவசாயிக ள் கோவிந்தராஜ், ராமநாதன், துரை பாஸ்கர், திருப்பதி வாண்டையார் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.