காளையார்கோவில்: பிப்:07
சிவகங்கை மாவட்டம் காளையர் கோவில் ஒன்றியத்தில்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆலோசனையின் பேரில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தெற்கு ஒன்றியக்கழகத்தில் பாகநிலைக்குழு உறுப்பினர் கூட்டமானது நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒன்றியக்கழக செயலாளர் யோக. கிருஷ்ணகுமார் தலைமையிலும் தொகுதி பார்வையாளர் புதுக்கோட்டை சண்முகம் முன்னிலையிலும் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிஎல்சி எனப்படும் பாகநிலைக்குழு உறுப்பினர்களது தேர்தல் கால பணிகளைப்பற்றியும் அவர்களது பங்களிப்பு பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இந்த ஆலோசனைக்
கூட்டமானது மறவமங்கலம் , மேலசேத்தூர், சாத்தரசன்கோட்டை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் வரதராஜன், மாவட்ட பிரதிநிதிகள் தோக்கப்பன், சமயத்துரை, பொருளாளர் வெங்கடேஷ், துணைச்செயலாளர்கள் அமுதாரமேஷ்,ஒன்றியக்கழக நிர்வாகிகள் வீரையா , திருநாவுக்கரசு, ஐயப்பன், உள்ளிட்ட காளையார்கோவில் தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.