By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற
தூத்துக்குடி

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற

Last updated: April 7, 2025 1:20 pm
April 7, 2025
29 Views
Share
SHARE

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2023-24ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் ‘என் கல்லூரிக் கனவு” (எனது எதிர்கால கனவு நனவாகும் நிகழ்வு) உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையேற்று, மாணவ, மாணவியர்களுடன் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்த்தாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை மேம்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையை குறைக்கவும் ‘என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் முன்னெடுப்பு திட்டம் வருடந்தோறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இன்று தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு மாணவர்களின் எதிர்கால கனவை நினவாக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ – மாணவியர்கள் வருகைதந்துள்ளீர்கள். முதலில் உயர்கல்வி கற்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் உயர்கல்வி கற்பதால் உங்களுடைய வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயரும் என்பதில் எந்தவொரு ஐயமில்லை.
உயர்கல்வி கற்பதால் தங்களுடைய அறிவை மென்மேலும் வளர்த்து கொள்ள முடியும். இதில் ஒரு சில மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்து தொழில் தொடங்கி ஒரு தொழில் முனைவோராக ஆக முடியாதா என்று கேட்கலாம்? ஆகலாம் ஆனால் அந்த தொழிலை திறம்பட நேர்த்தியாக கையாளுவதற்கு உயர்கல்வி மிகவும் முக்கியப்பங்கு வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், மாணவர்கள் உயர்கல்வி பயிலும் காலகட்டத்தில் பல்வேறு நிலைகளிலிருந்து வரக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதினால் அவர்களின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளிலிருந்து வரக்கூடிய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு உயர்கல்வி மிகவும் அவசியம்.
கல்விக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் நலன்காக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான பேர் போட்டித்தேர்வு எழுதினாலும் சில நூறு பேருக்குதான் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. எனவே, தங்களது தனித்திறமை வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர்கல்வி கற்கும் போது மாணவர்களிடையே தலைமைப் பண்பு வளரும். அதாவது, ஒரு வேலையை எப்படி நேர்த்தியாக செய்வது, அதனை எவ்வாறு ஒருங்கிணைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் எவ்வாறு முடிப்பது, உரிய நேரத்தில் முடிவெப்பது உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களையும் பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.
இந்த அனுபவம் தான் உங்கள் எதிர்காலத்திற்கான முதற்படி. அது எங்கு கிடைக்கிறது என்றால் உயர்கல்வியில் தான். ஒவ்வொரு மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் ஒரு உயர்ந்தநிலையில் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவாக ஒரு இலக்காக இருக்கும். அதனை மாணவர்களாகிய நீங்கள் நன்கு அறிந்து செயல்பட வேண்டும். உயர்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளது. எந்த பாடப்பிரிவு எடுத்து படிக்கலாம். எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்து படித்தால் வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும். பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து இந்நிகழ்ச்சி மூலம் பல்வேறு கல்வியாளர்கள், வல்லுநர்கள் உங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குவார்கள். உங்களுக்கு விருப்பமான பாடத்தை படியுங்கள். பட்டப்படிப்பு படித்தால் மத்திய, மாநில அரசு பணிகள் மற்றும் வங்கிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எழுதலாம்.

மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் விரும்பி எடுக்கக்கூடிய பாடப்பிரிவு உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கக்கூடிய ஒன்று. ஆகையால், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவா என்பதை நன்கு அறிந்து ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற்று பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 3 முதல் 5 வரையில் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனை அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தவறாது பின்பற்ற வேண்டும்.
இதில், இறுதியாக எந்த பாடப்பிரிவு எடுத்தால் உங்கள் எதிர்கால கனவு நனவாகும் என்று என்னுகிறீர்களோ அந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படியுங்கள். மேலும், தனியார் கல்லூரியில் விண்ணப்பிக்க செல்லும் போது அரசு ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக முடிவடைந்துவிட்டதா என்பதை ஆராய்ந்து, இதில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் மட்டும் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டுக்கு செல்ல வேண்டும். எனவே, உங்களுடைய வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய நேரம் தொலைவில் இல்லை. ஆகையால், தேர்வு முடிவுகள் வந்த பிறகு நன்கு கவனமாக சரியாக ஆலோசித்து தங்களது எதிர்கால கனவை நனவாக்கக்கூடிய பாடப்பிரிவைத் தேர்வுசெய்து நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜா.பென்னட் ஆசீர், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி, மாவட்ட மேலாளர் தாட்கோ ஜெனிஷிஸ்.ம.ஷிபா, தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, பாலகிருஷ்ணன், பள்ளி மாணவ – மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
சுற்றுச்சுழல் பாதுகாப்பு பணிக்குழு கூட்டம்; ஆட்சியர் க. இளம்பகவத் பங்கேற்பு
விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பரமக்குடியில் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்

February 26, 2025
43 Views
இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்
குரூப் 1 தேர்வு மையத்தை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account