தருமபுரி டவுனில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி ரக்ஷனா 596 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும் மாவட்டத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். ஹேமவர்ஷா 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், தான்ய ஸ்ரீ 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தையும், பிரித்திகா தர்சினி 590 மற்றும் பிரதீப் குமார் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் நான்காம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தியுள்ளனர். 590 மதிப்பெண்களுக்கு மேல் ஐந்து மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 24 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 39 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 57 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 71 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 185 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இப்பள்ளியின் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தருமபுரி செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கி பாராட்டினார். துணைத் தலைவர் மணிமேகலை, செயலாளர் தனசேகர் ,நிர்வாக அலுவலர்கள் கார்த்திகேயன், ரபிக் அஹமத், மூத்த முதல்வர்கள் சீனிவாசன், வள்ளியம்மாள், முதல்வர் (நிர்வாகம்)ஓங்காளி, துணை முதல்வர் கவிதா, மேல்நிலை பிரிவு பேராசிரியர் திருநாவுக்கரசர் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics