திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் பாண்டூர் திருமங்கலம் காளி ஆகிய ஊராட்சி கடைவீதிகளில் நடைபெற்றது. மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சர்வோதயன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா சிறப்பு பேச்சாளர் ம.க. சூர்யா கலந்துகொண்டு துணை முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் அரசு அறிவிக்கும் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து ஏழை எளிய மக்களின் நலன் காத்து வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி பேசினர். இதில் முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன் , ஒன்றிய செயலாளர் முருகமணி மற்றும் திமுக ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.