நாகர்கோயில் – அக்- 24,
குமரி கடல் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது .. நாகர்கோவில். பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ..
வங்க கடலில் உருவான டானா புயல் இன்று இரவு கரையை கடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக கள்ளியாகுமரி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்து பெய்து வருவதால் முக்கிய அனைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது : நேற்று மாலை முதலே நாகர்கோவில், பார்வதி புரம் கோட்டார் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்தது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது … சாலைகளை சீரமைப்பு பணிகள் அரசு தரப்பில் செய்யாததால் இந்த மழையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.