திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பாக தவக்காலத்தின் 6-ஆம் வெள்ளி
சிலுவைப்பாதை ஒலி& ஒளி காட்சிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் மேதகு P .தாமஸ்பால்சாமி D,D அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சிலுவைப்பாதை ஒலி &ஒளி காட்சிகள் நிகழ்ச்சி திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கி தலைமை தபால் நிலையம், பேருந்து நிலையம், மீனாட்சி பவன், பெரியார் சிலை உட்பட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முடிவில் பேராலயம் வந்தடைந்தது. இந்நிகழ்வில் மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்பணி T. சகாயராஜ், ஆயரின் செயலர் தந்தை ஜான் போஸ்கோ, மறைவட்ட அதிபரும், புனித வளனார் பேராலய பங்குத்தந்தையுமான பேரருட்பணி R.மரிய இஞ்ஞாசி, உதவி பங்கு தந்தையர்கள் அருள் பணி A.ரிக்சன் ராபர்ட் அருள் பணி ,M.லீனஸ் இருபால் துறவியர், பங்கு பேரவை துணைத் தலைவர் AMC புஷ்பராஜ், செயலாளர் A. ராஜ்குமார் துணைச் செயலாளர்கள் A R யூஜின் மெர்சி ரூபி பொருளாளர் J. டயஸ் பிரபு, PRO J. சசிகுமார் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், அன்பியங்கள், பக்த சபையினர், அனைத்து தெரு நிர்வாகிகள், பங்கு இயக்கங்கள், பங்கு இறைமக்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இறையாசீர் பெற்று சென்றார்கள்.



