ஈரோடு ஜூலை 21
ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி நடைபெற்றது இதில் 15 க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன
இந்த போட்டியில் நம்பியூர் அமுதா பள்ளி அபாரமாக விளையாடி முதல் பரிசை தட்டி சென்றது 2 ம் பரிசை திருப்பூர் வித்ய விகாஷினி பள்ளி மற்றும் 3 ம் பரிசை ஈரோடு டி வி பி பள்ளி 4 ம் பரிசை விஜயமங்கலம் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகள் பெற்றன
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை கல்லூரி முதல்வர் ராமன் மற்றும் சிறப்பு விருந்தினர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் அத்திஷ் மற்றும் கைப்பந்து பயிற்சியாளர் அமைப்பாளரான பிரதீப் ஆகியோர் வழங்கினர்.



