சங்கரன்கோவில் காயிதே மில்லத் 4ம் தெருவைச் சேர்ந்த அக்பர் அலி செய்யது அலி பாத்திமா தம்பதியரின் மகன் அஸ்ரப் பிளஸ் டூ தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளில் தட்டச்சும் சுருக்கெழுத்தும் பயின்று எந்த கோச்சிங் சென்ட ருக்கும் செல்லாமல் அரசு தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கேற்று சிறுபான்மையினர் சுருக்கெழுத்தர் பிரிவில் அஷ்ரப் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இவரது தந்தை அக்பர் அலி தனியார் உணவகத்தில் கூலி தொழிலாளராக பணியாற்றி வருகிறார் சாதனை படைத்த அஷ்ரப்பை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் மேலும் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்று பதவி உயர்வு பெறுவும் போட்டித் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குபடியும் கேட்டுக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நிகழ்வில் வருவாய் ஜப் வட்டாட்சியர் மைதீன் பட்டாணி நகர திமுக செயலாளர் பிரகாஷ் உள்பட திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



