வேலூர்_04
வேலூர் மாவட்டம் ,வேலூரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் லாங்குவேஜ் பில்லரின் லாங்கதான் 2k24 நிகழ்ச்சி வெற்றிகரமாக வேலூர் ஏ. கே. எம் மஹாலில் நடைபெற்றது. இதில் 65க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக விஐடி பல்கலைக்கழகத்தின் உதவி துணைத் தலைவர் செல்வி கதம்பரி ச. விஸ்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் கோப்பைகளை
வழங்கினார். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த லாங்கதான் 2k24ல் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. அதில் ஃபோனிக்ஸ் சேலஞ்ச், பப்ளிக் ஸ்பீக்கிங், எங் ஆத்தர், டிசைன் திங்கிங், டிரீம் ஐ ஏ எஸ், யூனிக் டலன்ட் ஃபெஸ்ட், லாங்குவேஜ் பிரண்ட்லி போன்ற போட்டிகள் நடைபெற்றன. மேலும், இந்த விழாவில் பிற மொழிகளை கற்பதன் முக்கியத்துவத்தினை சிறப்பு விருந்தினர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இந்த நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர். இதுபோன்ற போட்டிகளில் பங்கு கொள்வதன் மூலம் தங்களுடைய பிள்ளைகளின் தன்னம்பிக்கை அதிகரிப்பதாகப் பெற்றோர்கள் தெரிவித்தனர். லாங்குவேஜ் பில்லர் கல்வி நிறுவனம் வேலூரில் மூன்று கிளைகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.