திண்டுக்கல்லில் ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரம் நிகழ்ச்சி திண்டுக்கல் வத்தலகுண்டு ரோட்டில் உள்ள குடை பாறைப்பட்டி எஸ்பிடி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ சித்ரா தாசாஜி கலந்து கொண்டு பேசியதாவது , இன்று நாம் சந்தித்து வரும் பிரச்சனைகளில் பெரும்பாலனவை தேக ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்ய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தான். வெளி உலகில் இவ்வாறு நமக்கு ஏற்படும் இடர்கள் அனைத்தும் நமது உள்ளுலகின் பிரதிபலிப்பே! ஸ்ரீ பரஞ்ஜோதி சோம தீக்ஷையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பரம்பொருள் ஸ்ரீ பரம் ஜோதி அம்மா பகவானின் கருணைமிக்க அனுக்கிரஹத்தால் உள்ளுலக மாற்றம் சித்திக்கும். இதன் அருட் பலனாக வெளியிலகிலும் சம்பூரண ஆரோக்கியம் ஐஸ்வர்ய வளர்ச்சி செல்வ செழிப்பு போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறும் என தெரிவித்தார். மேலும் ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரம் பூஜையின் தெய்விக பலன்களான : உடல் மற்றும் மன பாதிப்புகளுக்கு காரணமான அறியாமையை நீக்கும் ஞானம் பெறவும்,
ஆரோக்கியத்தை பாதிக்கும் தீய சக்திகளில் இருந்து விடுதலை பெறவும்,
பயத்தை போக்கி தைரியம் அருளும் இறை அனுபவம் பெறவும் ,நோய் நிவாரணத்திற்காக சிறப்பு ஆரோக்கிய தீக்ஷை,
ஆரோக்கியத்தின் அடித்தளமான மன அமைதி பெற சிறப்பு ஆனந்த தீக்ஷை,
தீராத கர்ம வியாதிகளின் பாதிப்புகளிலிருந்து விடுதலை பெற கர்மமயகோஷ சாதனை பெறவும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.இதில் ஸ்ரீ பரம்ஜோதி ஆரோக்கிய சோம வரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
அனைவருக்கும் ஆரோக்கிய தைலம் மற்றும் அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.