கம்பம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் சுருளி மலையில் முற்பது முக்கோடி தேவர்களும், நாற்பத்தொண்ணாயிரம் ரிஷிமார்களும்பாலும் சுருளி மலை சுருளி தீர்த்த நதிக்கரையில் இருந்து அருள்பாளித்து வரும் பூத நாராயண பெருமாள் திருக்கோவிலில் செவ்வாய்கிழமை மாலை தேனி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவல் குழு உறுப்பினர்கள் கே.ஆர் ஜெயபாண்டியன், கே.வி.பி.முருகேசன் தலைமையில் மற்றும் வெள்ளையன் செட்டியார் வகையறா, காமாட்சி செட்டியார் வகையறா பரம்பரை அறங்காவலர்கள் மற்றும் பூசாரிகள் முன்னிலையில் மூலவர் விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்கள் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதல் நாள் கால சாலயாக பூஜையாக அணுக்ஞை விஸ்வ சேனாஆராதனை, புண்ணியா ஹவாசனம்,எஜமான சங்கல்பம், விமானம் கால கர்சனம்,யாகசாலை பிரவேசம் முதல்கால வேதிகா அர்ச்சனை, சுதர்சன ஹோமம் விசேஷ ஹோமம் மகா பூர்ணஹீதி,தீப ஆராதனை மூலவர் ஸ்தாபன கலச
திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது. இரண்டாம் நாள் புதன்கிழமை காலை சுப்ரபாத சேவை,விஸ்வரூப தரிசனம்,மூலவர் சகஸ்ரநாம அர்ச்சனை, இரண்டாம் கால ஹோமம் ஆரம்பம்,திரவிய ஹீதி, வஸ்திர ஹீதி, மஹா பூர்ணாஹீதி,தீபாராதனை,யாத்ரா தானம்,கடம் புறப்பாடல் தொடர்ந்து சரியாக 10:30 மணிக்கு விருச்சக லக்னத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் விமான பாலாலயம் வெகு விமர்சியாக நடைபெற்று .இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும், கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.இந்த பாலாலய வைபவத்தை கூடல் ஆழகி பெருமாள் திருக்கோவில் அர்ச்சகர், குணசீலன் நடத்தி வைத்தார்.இதில் சக அர்ச்சகர்கள் கோவில் பூசாரிகள் என பலர் கலந்து கொண்டு பாலாலயத்தை நடத்தினர்.