சென்னை, ஏப்ரல் 5
தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் புதிய அங்கமாகத் திகழும் தேனி மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கினை (Multipurpose Indoor Stadium) இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் துணை முதல்வர் உதயநிதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்த அரங்கம், Volley Ball, Basket Ball, Table Tennis, Shuttle Cock போன்ற பலவித விளையாட்டுகளுக்கான வசதிகளை கொண்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 600 பார்வையாளர்கள் வரை அமர்ந்து போட்டிகளை காணமுடியும்.
அதேபோல், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள Mini Stadium – இல் ரூ.50 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய பளு தூக்கும் பயிற்சி மையத்தையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய வசதிகள், தேனி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும் சாதனைக்கும் நிச்சயமாக துணை நிற்கும் என்று விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.