ராமநாதபுரம், மே 11-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டும், நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் ,நலமுடன் இருக்கவும், நமது நாடு வெற்றி பெற்றிடவும் இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன்ஏற்பாட்டில் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.`
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் பகுதியில் அமைந்துள்ள கோயிலில்
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் எம் எஸ் ஆர் ராஜ வர்மன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருதுபாண்டியன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர் ஜி ரத்தினம், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார, கழக மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிகட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் ராஜா, நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஒன்றிய நகர் கிளை கழகம் நிர்வாகிகள் தொண்டர்கள் இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.