கிருஷ்ணகிரி,.ஜுன்.30- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு உத்தரவு பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் களர்பதி ஊராட்சியில் 2024-25 ஆம் நிதி ஆண்டிற்கான கிராமப்புற வீடுகள் பழுதுபார்த்தல் திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் செயல்பபடுத்தல் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்து சிறப்பு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலகம் வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 29-பயனாளிகள் வீடு கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் 35 மனுக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கொடுத்தனர்.அதில் வீடு, பட்டா, ஓய்வுதியம் உள்ளிட்ட மனுக்கள் பொதுமக்கள் வழங்கினர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



