ஆம்பூர்:நவ:08, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சமயவல்லி உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி ஆலயத்தில் திருக்கோவிலில் கந்த சஷ்டி நான்காம் நாள் சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது .
நிகழ்ச்சியில் ஸ்ரீ வள்ளி தெய்வானை முருகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கையில் வேல் ஏந்தி மற்றும் தலையில் கிரீடம் சூட்டி வெள்ளி, பொன் ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்தார்.
பின்னர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பல்வேறு வேதங்கள் முழங்க அர்ச்சனை செய்யப்பட்டன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தீபம் ஏற்றி வழிபட்டனர் இதனை தொடர்ந்து குருக்கள் பூக்களால் அர்ச்சனை செய்து தீபா ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் உபயதாரர் Ln.G.ஓம் சக்தி பாபு/ சக்தி, தமிழ்செல்வி பாபு 24 வருடங்களாக குடும்பத்தினர் நிகழ்ச்சி. அனைத்து சிவனடியார் தலைமையில் நடைபெற்றன நிகழ்ச்சியில் குரு தியாகு கலந்து கொண்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.