நாகர்கோவில் மே 09
கடந்த ஏப்ரல் மாதம் களியக்காவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பரந்தாமன் (30) என்பவர் தனது தாய் மற்றும் தந்தையிடம் சொத்தில் பங்கு கேட்டு அவர்களை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பரந்தாமன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் பரந்தாமன் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.