தருமபுரியில் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பாக இளைஞர்களுக்கன சமூக வலைதள பயிற்சி கூட்டம் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்,மண்டல பொறுப்பாளருமான பி.எஸ்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட இயக்க எழுத்தாளர் மதிமாறன்,கழக இளைஞரணி சமூக வலைதள பயிற்சியாளர் மா.இளமாறன் பங்கேற்று
சமூக வலைத்தளங்களில் பாக இளைஞர் அணி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளித்தனர். நகர செயலாளர் நாட்டான் மாது,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன் ஏற்பாட்டில் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அசோக்குமார், செல்வராஜ், கலைச்செல்வன்,ராஜகோபால், முத்தமிழ்,கார்த்திக்,மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய,கழக நிர்வாகிகள்,பாக இளைஞர்கள் கலந்து கொண்டனர்.