காஞ்சிபுரம் ஏப். 29
காஞ்சிபுரம் மாவட்ட கழகம், ஸ்ரீபெரும்புதூர் நகர கழகம் சார்பில் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கிடப்பில் போட்ட விடியா திமுக அரசையும் கண்டித்தும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் அத்தியாவசிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகே
ஸ்ரீபெரும்புதூர் நகரக் கழக செயலாளர் போந்தூர் மோகன் ஏற்பாட்டில் ,குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் பழனி, மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும் செய்தி தொடர்பு செயலாளரும் ,மாவட்ட பொருப்பாளருமான, எஸ்.எஸ்.வைகை செல்வன் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்.
உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்,அனைத்துலக
எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பாசறை துணை செயலாளர் இருங்காட்டு கோட்டை சிவகுமார், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம்,மாவட்ட துணை செயலாளர் , ரேவராட்சாயினி சுந்தரராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் எம்.எம்.மதன், ஒன்றிய கழக செயலாளர்கள் எறையூர் முனுசாமி, சிங்கிலிபாடி ராமச்சந்திரன்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் காவனூர் வெங்கடேசன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் பிரஷித்தா குமரன், மாவட்ட பிரதிநிதிகள் வெங்காடு உலகநாதன்,படப்பை மாரி,பகுதி கழக செயலாளர்கள் ஜெயராஜ்,கோல்டு ரவி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பிள்ளைபாக்கம் வெங்கடேசன், ஒன்றிய கழக பொருளாளர் திருமால், ஒன்றிய கவுன்சிலர் சத்யா பூபாலன்,
கீழம்பி & மேலொட்டிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் அம்பி விமல்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் மண்ணூர் அறிவுச்செல்வன், பெங்களூர் குப்பம் ராஜேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.