சிவகங்கை மாவட்டம்
திருப்புவனம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரமனூர் ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்செல்வம் முருகன். பழையனூர் காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் மேற்கண்ட ஊராட்சியில் துணைத் தலைவராக பணியாற்றிய பாஸ்கரன் என்பவருக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும்
இதனைத் தொடர்ந்து அரசு துறை அதிகாரிகள் துணை தலைவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில்
சொக்கநாதிருப்பு கிராமத்தில் மகளிர் குழுவினருக்காக கட்டப்பட்ட மையத்தை திறந்து வைக்க ஊராட்சி தலைவர் அங்கு வந்த போது துணைத் தலைவர், தலைவரையும் அவரது கணவரையும் தாக்கியதாக மேற்கண்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொடுத்த புகாரை திரும்பப் பெறச் சொல்லி உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் என்பவர் தொடர்ந்து அச்சுறுத்தல் செய்து கொலை மிரட்டல் விடுவதாகவும் இதனால் எங்களுக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்றும் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவரிடம் கேட்ட போது நான் தாழ்த்தப்பட்ட ஜாதியாகவும் துணைத் தலைவர் உயர்ந்த ஜாதியாகவும் இருப்பதனால் எனது ஜாதிப் பெயரைச் சொல்லி தரை குறைவாக பேசுகிறார் அதற்கு உடந்தையாக காவல் உதவி ஆய்வாளரும் இது வரை அவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனவே நீதி கேட்டு மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளேன் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்தார்.


