வேலூர்=14
வேலூர் மாவட்டம் ,தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு, சிங்கத்தமிழன் சிலம்பம் அகாடமியில், சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள், பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், பரதம்,இசைக்கருவி வாசித்தல், பாட்டு போட்டி , பேச்சு போட்டி ,திருக்குறள் ஒப்புவித்தல் முதலான தனித்திறமைகளை, சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி மாணவ மாணவிகள் வெளிகாட்டி பரிசுகள் பெற்றனர்.
மேலும், மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் உரி அடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.