திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.செல்வபெருந்தகை அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் மச்சக்காளை தலைமையில் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் தெற்கு வட்டார தலைவர் எல். முருகானந்தம், வடகிழக்கு வட்டாரத் தலைவர் கே. தனபால் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வி. பாலசுப்பிரமணியன், பரமன், ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர் ஏ. எம். ஜாகிர்உசேன் மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.சதீஷ்குமார் , மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். சபியுல்லா , எம். அம்சவல்லி, மாவட்ட நிர்வாகிகள் அரபு முகமது, வீ .பொட்டுச்செல்வம், பாபு, அந்தோணி, பிரபு, வழக்கறிஞர் முகமதுநாசர், மாவட்ட எஸ்.சி எஸ்டி பிரிவு தலைவர் எஸ்.டி.கே. ராஜாங்கம் ,மாவட்ட மாணவரணி தலைவர் நவாஸ், வட்டார நிர்வாகிகள் மௌனகுரு, பாலாஜி, குமார், மாவட்ட துணைத்தலைவர் தங்கவேலு, மாவட்ட செயலாளர் வடிவேலு, மாநில பேச்சாளர் ஆர். பாலு, மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு செயலாளர் அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளித் தேரினை இழுத்து மாநில தலைவர் எல்லா நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை வலுவோடு நடத்துவதற்கு ஆசி வழங்க வேண்டும் என்று சௌந்தர்ராஜ் பெருமாள் கோவிலில் வேண்டிக் கொண்டு இந்த தேரினை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார்கள்.இந்நிகழ்ச்சியின் முடிவில் 500 பேர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



