களியக்காவிளை, மே, 16
படந்தாலுமூடு வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மைய நிறுவனர் மாஸ்டர் வில்சனுக்கு ரெட் பெல்ற்று வழங்கப்பட்டது.
களியக்காவிளை அருகே படந்தாலுமூட்டில் வேல்டு ஷோட்டோ கான் கராத்தே பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கராத்தே பயிற்சி மையம் 1984-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இவருக்கு 1988-ம் ஆண்டு முதல் கறுப்பு பட்டை வழங்கப்பட்டது. மாஸ்டர் வில்சன் தலைமையில் தினமும் மாணவ ,மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். இவரின் இடைவிடாத முயற்சியால் கராத்தேயில் 9 கறுப்பு பட்டைகள் வழங்கப்பட்டது. தற்போது இவருக்கு ரெட் பெல்ற்று என்ற 10- வது பிளாக் பெல்ற்று வழங்கப்பட்டது.
ஜப்பான் நாட்டை சார்ந்த வேல்டு ஷோட்டோ கான் நிறுவன தலைவர் ஷோக் அமத், அல் ஷிகானி, துருக்கி நாட்டை சார்ந்த வேல்டு ஷோட்டோ கான் நிறுவன தலைவர் ஷேக் கேமல் ஷிஹானி, உள்ளிட்டோர் மாஸ்டர் வில்சனுக்கு ரெட் பெல்ற்று என்ற 10- வது கறுப்பு பட்டை வழங்கினார்கள்.
இந்த ரெட் பெல்ற்று என்ற 10-வது கறுப்பு பட்டை வழங்கும் நிகழ்ச்சியில் படந்தாலு மூடு சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருட்தந்தை தோமஸ் சத்தியநேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியில் செயல்பட்டு வரும் வேல்டு ஷோட்டோகான் கராத்தே பயிற்சி மையத்தின் தலைவர் மாஸ்டர் பரூக், தர்மபுரி வேல்டு ஷோட்டே கான் பயிற்ச்சி மையத்தின், தலைவர் பாலமுருகன் கராட்டே மாஸ்டர்கள் அஜித், மகிழ், ரமேஷ், சுந்தர்ராஜ், ஷாஜகான், விஜயராஜ்,மற்றும் தமிழக கேரளா மாநிலங்களை சார்ந்த நூற்றுக்கும் அதிகமான பிளாக் பெல்ற்று மாஸ்டர்கள், கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்கள் ஐந் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.