திங்கள் சந்தை, மார்- 9
இரணியல் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தக்கலை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் ரகு, பயிற்சி உணவு பாதுகாப்பாக அலுவலர் ஜெப்ரிமோள், மதுவிலக்கு அமலாக்கத்துறை எஸ்ஐ குமரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மடவிளாகம், கண்டன் விளை பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லிப் பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைப்பது குறித்து மாவட்ட அலுவலர் டாக்டர் செந்தில்குமாருக்கு பரிந்துரை செய்தனர். அவரது உத்தரவின் பேரில் நேற்று மூன்று கடைகளுக்கும் சீல் வைத்து தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.