சங்கரன்கோவில்.அக்.30.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள
300 சிறப்பு குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4ம் ஆண்டாக புத்தாடைகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளி , பிளசிங் சிறப்பு பள்ளி , சேர்ந்தமரம் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி, சங்கரன்கோவில் அரசு சிறப்பு குழந்தைகள் பள்ளி மற்றும் சங்கரன்கோவில் விண்மீன் காப்பகத்தில் உள்ள குழந்தைகள் உள்ளிட்ட 300 சிறப்பு குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார் . தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக விண்மீன்கள் பள்ளியில் உள்ள குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப புத்தாடைகளை எடுத்துக் கொள்ள செய்தார் .இதனால் அந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரிய துரை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராயல் கார்த்தி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, மாரிக்குட்டி, ஜெயக்குமார் ,கார்த்தி, பாலாஜி மற்றும் விண்மீன்கள் இல்ல பணியாளர்கள் மற்றும் சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.