ஆரல்வாய்மொழி நவ 11
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா கோவிலில் திருவாசகப் பெருந்திருவிழா நேற்று நடைபெற்றது..
விழாவில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, கோவில் ஸ்ரீகாரியம் சேர்மராஜா, திருவாசக சபை தலைவர் மேகலிங்சம், ராம நாகலிங்கம், ஒருங்கிணைப்பாளர் ஆடலரசு, கன்னியாகுமரி மாவட்ட திருவாசக முற்றோதுதல் குழு அடியார் குழுவினர் உள்பட பக்தர்கள் பங்கேற்றனர். கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டிருந்த திருவாசகம் புத்தகம் ஊர்வலம் ரத வீதிகளில் சுற்றி வந்தது.