மார்த்தாண்டம் ஜன 21
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி ஊரில் உள்ள கோவில் திருவிழாவை ஒட்டி பக்கத்து வீட்டை சேர்ந்த தாத்தா உறவு முறை கொண்ட டிரைவர் நாகேந்திரன் (51)என்பவர் சிறுமியை புதிய துணி வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றார்.
சிறுமியின் தாய் நாகேந்திரனுடன் மகளை அனுப்பி வைத்தார். மாலையில் தாய் வீட்டுக்கு வந்தபோது மகள் அழுது கொண்டிருந்ததால் என்னவென்று விசாரித்தார். அப்போது பைக்கில் சென்ற போது ஒரு இடத்தில் நாகேந்திரன் பைக் நிறுத்தி அங்கு உள்ள கட்டிடத்தின் பின்னால் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததை கூறியுள்ளார்.
உடனடியாக தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நாகேந்திரன் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.