கன்னியாகுமரி மே 11
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் சன்னதி தெருவில் பாய்ந்தோடும் சாக்கடையால் முகம் சுளிக்கும் பக்தர்கள்
பொதுமக்கள் கண்டனம்
புனிதமான அருள்மிகு பகவதியம்மன் கோவில் அமைந்துள்ள சன்னதி தெருவில், சாக்கடை நீர் சாலையில் பாய்ந்து ஓடுகிறது.
பிரபல புனித தலமாகவும், சுற்றுலா பயணிகள் அதிகம் திரளும் இடமாகவும் இருக்கும் இந்த பகுதியின் சாலையில் சாக்கடை நீர் பாய்ந்து ஓடுவதால், கோவிலுக்குச் செல்லும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் முகம் சுளித்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாக்கடை நீரின் துர்நாற்றம் மற்றும் சுகாதாரக்கேடு, பொதுமக்களில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்கள் சாக்கடை நீர் வழியாக நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதால், இது தொடர்பாக நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



