குழித்துறை நவ 17
குழித்துறை அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஏஆர் கேம்ப் மைதானம், புதுக்கடை போலீஸ் ஸ்டேஷன், குழித்துறை அலகு அலுவலகம் முதலியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 6 இரு சக்கர வாகனங்கள், 2 ஆட்டோக்கள் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 15 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. நாகர்கோவில் நடுகாட்டு இசக்கி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் வருகிற 20-ம் தேதி (புதன் கிழமை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடக்கும். ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறவர்கள் 3 தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் இடங்களில் உள்ள வாகனங்களை பார்வையிடலாம். இந்த தகவல் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.