திருப்பத்தூர்:ஆக:23, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களில் ஒன்றான உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். சின்னாரம்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பணிகளை நேரடியாக பார்வையிட்டார். சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டு அதன் பிறகு அங்கிருக்கும் பணியாளர்களிடம் என்னென்ன பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும் கேட்டு அறிந்தார். ஊராட்சி செயலாளர் பதிவு செய்துள்ள பதிவேடுகளையும், தூய்மை பணிகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தார். பிறகு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு சென்று அங்குள்ள தூய்மை பணிகள் மட்டும் என்று இல்லாமல் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும், பள்ளி குழந்தைகளிடம் தமிழ் ,ஆங்கிலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திட்டங்களில் மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் திறன் குறித்து அறிந்து கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் கரும்பலகையில் கணிதத்தை எழுதி மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தியது அந்த மாணவர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நீர் திறக்க தொட்டி பராமரிப்பாளரிடம் நேரடியாக நீர் தாக்குத் தொட்டியில் தூய்மை பணி மற்றும் தண்ணீரின் தூய்மை குறித்தும் கேட்டறிந்தார். ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புற ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு உபரி நீர்களை சேமித்து விவசாய தேவைக்கு பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார். ஊராட்சிக்கு அருகாமையில் ஏரி குட்டையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களிடம் சென்று உங்களுக்கு சரியான முறையில் பணிகள் வழங்கப்படுகிறதா முறையான நேரத்திற்கு வேலைகள் அமர்த்தப்படுகிறதா என அங்குள்ள பெண்களிடம் கேட்டு அறிந்தார். மருத்துவத் துறை சார்பில் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் முன் பாதுகாப்போடு மாத்திரைகள் மருந்துகள் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சரியான முறையில் ஆலோசனைகள் வழங்கி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்பதை சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கேட்டறிந்தார். ஊராட்சிகளில் மழைக்காலம் என்பதால் கொசு மருந்து அடிப்பது, மருந்து தெளிப்பான்களை தெளிப்பது ஆகிய முன்னேற்பாடுகளை செய்கிறார்களா என்பதை கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்திற்கு நேராக சென்று குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்கள் உணவுகள் வழங்கப்பட்டு வருவதை நேரில் குழந்தைகளிடமே விசாரித்தார். மேலும் வட்ட வழங்கல் அலுவலகம், பின்தங்கிய வீடுகளின் நிலை பற்றியும், வேளாண்மை இடுபொருட்கள் போதுமான இருப்புகளை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதையும் தொடர்ந்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துறை சார்ந்த அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.திருப்பத்தூர்:ஆக:23, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டங்களில் ஒன்றான உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். சின்னாரம்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்குள்ள பணிகளை நேரடியாக பார்வையிட்டார். சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பல்வேறு முறைப்படுத்தப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டு அதன் பிறகு அங்கிருக்கும் பணியாளர்களிடம் என்னென்ன பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும் கேட்டு அறிந்தார். ஊராட்சி செயலாளர் பதிவு செய்துள்ள பதிவேடுகளையும், தூய்மை பணிகள் குறித்தும் நேரடியாக கேட்டறிந்தார். பிறகு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளிக்கு சென்று அங்குள்ள தூய்மை பணிகள் மட்டும் என்று இல்லாமல் காலை உணவு திட்டம் முறையாக வழங்கப்பட்டு வருகிறதா என்பதையும், பள்ளி குழந்தைகளிடம் தமிழ் ,ஆங்கிலம் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடத்திட்டங்களில் மாணவ மாணவிகளின் கற்றல் கற்பித்தல் திறன் குறித்து அறிந்து கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் கரும்பலகையில் கணிதத்தை எழுதி மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தியது அந்த மாணவர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நீர் திறக்க தொட்டி பராமரிப்பாளரிடம் நேரடியாக நீர் தாக்குத் தொட்டியில் தூய்மை பணி மற்றும் தண்ணீரின் தூய்மை குறித்தும் கேட்டறிந்தார். ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்புற ஏரிகள், குட்டைகள் ஆகியவற்றை நேரடியாக பார்வையிட்டு உபரி நீர்களை சேமித்து விவசாய தேவைக்கு பயன்படுத்துவதை சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார். ஊராட்சிக்கு அருகாமையில் ஏரி குட்டையில் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண்களிடம் சென்று உங்களுக்கு சரியான முறையில் பணிகள் வழங்கப்படுகிறதா முறையான நேரத்திற்கு வேலைகள் அமர்த்தப்படுகிறதா என அங்குள்ள பெண்களிடம் கேட்டு அறிந்தார். மருத்துவத் துறை சார்பில் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் முன் பாதுகாப்போடு மாத்திரைகள் மருந்துகள் குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சரியான முறையில் ஆலோசனைகள் வழங்கி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்பதை சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கேட்டறிந்தார். ஊராட்சிகளில் மழைக்காலம் என்பதால் கொசு மருந்து அடிப்பது, மருந்து தெளிப்பான்களை தெளிப்பது ஆகிய முன்னேற்பாடுகளை செய்கிறார்களா என்பதை கேட்டறிந்தார். அங்கன்வாடி மையத்திற்கு நேராக சென்று குழந்தைகளுக்கு தேவையான சத்தான பொருட்கள் உணவுகள் வழங்கப்பட்டு வருவதை நேரில் குழந்தைகளிடமே விசாரித்தார். மேலும் வட்ட வழங்கல் அலுவலகம், பின்தங்கிய வீடுகளின் நிலை பற்றியும், வேளாண்மை இடுபொருட்கள் போதுமான இருப்புகளை பொதுமக்களுக்கு வழங்கப்படுவதையும் தொடர்ந்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், துறை சார்ந்த அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர், சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் உடன் இருந்தனர்.
சின்னாரம்பட்டி ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics